பத்தி எரியுது.. ‘தசரா’ வெற்றித்தனமான டீசர் ப்ரோமோ !

dasara

நானியின் ‘தசரா’ படத்தின் வெறித்தனமான டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது. 

ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் மிரட்டும் கதைக்களத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தசரா’. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நானி மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பரட்டை முடி, அழுக்கு பையனாக நடித்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. 

dasara

எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சத்யன் சூரியன் இசையமைத்து வருகிறார்.

dasara

இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெறித்தனமான டீசர் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த டீசர் வரும் ஜனவரி 30-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.  


 

Share this story