சந்தோஷ் நாராயணனின் தாறுமாறான இசையில் செகண்ட் சிங்கிள்... நானியின் ‘தசரா’ பாடல் வெளியீடு !

நானியின் ‘தசரா’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
நானியின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தசரா’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கி வருகிறார். வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் டீசர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
இதையடுத்த இந்த படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தாறுமாறாக உருவாகியுள்ள இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.