சம்பவம் செய்ய தயாராகும் நானி.. ‘தசரா’ டிரெய்லர் குறித்த அறிவிப்பு !

dasara

நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தசரா’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகி வரும் ‘தசரா’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் நடிகர் நானி மாறுப்பட்ட நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகிறது. 

dasara

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.  தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

dasara

வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வரும் மார்ச் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் டிரெய்லருக்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

 

Share this story