தேசிய விருது வென்ற மண்டேலா திரைப்படம் தெலுங்கில் ரீமேக்

தேசிய விருது வென்ற மண்டேலா திரைப்படம் தெலுங்கில் ரீமேக்

தேசிய விருது வென்ற மண்டேலா திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 27-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வருகிறது.

அஸ்வின் மடோன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மண்டேலா’. இப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த இயக்குநர் பிரிவுகளில் அஸ்வின் மடோன் தேசிய விருதுகளைப் பெற்றார். தொடர்ந்து, இப்படம் தெலுங்கில் ‘மார்டின் லூதர் கிங்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில், யோகி பாபு நடித்த கதாபாத்திரத்தில் சம்பூர்ணேஷ் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் பூஜா கொல்லுரு இதனை இயக்கியிருக்கிறார். 

இந்நிலையில், தெலுங்கு ரீமேக் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, வரும் அக்டோபர் 27-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளது.

Share this story