இந்திராகாந்தி, நர்கீஸ் தத் பெயர்களில் தேசிய சினிமா விருதுகள் நீக்கம்

சினிமாத் துறையில் சிறந்த படைப்புகளுக்கும் கலைத்துறையினருக்கும் தேசிய விருதுகள் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாக இவை கருதப்படுவதால் ரசிகர்கள் மத்தியிலும் இந்த விருதுகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டு. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இந்த ஆண்டு வழங்கப்பட உள்ளன. இதற்கான திரைப்படங்களை சமர்ப்பிக்கும் பணி கடந்த ஜனவரி 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
அதன்படி, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் எழுபதாவது தேசிய விருது விழாவில் சில மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த மாற்றங்கள்தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு எழக் காரணம். இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் வழங்கப்பட்டு வந்த ‘சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது’ தற்போது ‘சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருது’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.