நேஷ்னல் க்ரிஷ் நடிகைக்கு ஹோப்பி பர்த்டே .. குவியும் போஸ்டர்கள் !

pushpa 2

நேஷ்னல் க்ரிஷ் நடிகையான ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளையொட்டி போஸ்டர்கள் குவிந்துள்ளது. 

இந்தியன் சினிமாவில் நேஷ்னல் க்ரிஷ் நடிகை என்று அழைக்கப்படுவர் ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கீதாகோவிந்தம்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகையான மாறினார். 

pushpa 2

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் ஸ்ரீ வள்ளியாகவே வாழ்ந்திருப்பவர். அதேபோன்று தமிழில் ‘வாரிசு’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்திருந்தார். ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு விஜய்யுடன் அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இதுதவிர இந்தியில் சில படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘ரெயின்போ’ படத்தில் நடித்து வருகிறார். 

pushpa 2

இந்நிலையில் தனது 27வது பிறந்தநாளை நடிகை ராஷ்மிகா கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் ராஷ்மிகா நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2, ரெயின்போ, நிதினுக்கு ஜோடியாக நடிக்கும் படம் என அடுத்தடுத்த பிறந்தநாள் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

pushpa 2

 

Share this story