மீண்டும் ரிலீசுக்கு தயாரான ‘கோல்டு’.. நயன்தாரா படத்தின் முக்கிய அப்டேட் !

gold
மலையாளத்தில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள 'கோல்டு' படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவின் பிரபல நடிகையான நயன்தாரா, தற்போது ஷாருக்கானுடன் இணைந்து 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு முன்னரே நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் 'கோல்டு'. இந்த படத்தை 'பிரேமம்' படத்தின் மூலம் ரசிகர்களின் நெஞ்சை கொள்ளைக் கொண்ட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ளார். 

Gold

இந்த படத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் மலையாளத்தின் முன்னணி நடிகர் பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜேஷ் முருகேசன்‌ இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி ஓணம் பண்டிகையையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் திட்டமிட்டபடி தயாரிப்பு பணிகள் நிறைவடையாததால் இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story