குட்பை சொன்ன நஸ்ரியா – சோகத்தில் ரசிகர்கள்.

photo

குழந்தை நட்சத்திரமாக இருந்து இன்று முன்னணி நடிகையாக வலம்வருபவர் நஸ்ரியா. இவருக்கென தனிரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் சமூகவலைதளத்திலிருந்து சில காலம் விலக போவதாக அறிவித்து குட்பை சொல்லியிருக்கிறார்.

photo

குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் பல படங்கள் நடித்திருந்தாலும், தமிழ் திரையுலகில் 2013ஆம் அண்டு ‘நேரம்’ பட மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவரது குயூட் ரியாக்ஷனுக்கு பலரும் அடிமை என்றே கூறலாம். தொடர்ந்து தமிழில்  ராஜாராணி படம் மூலமாக முன்னணி நடியகையானார். அடுத்து திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். மீண்டும் ரீஎண்ரி கொடுத்த நஸ்ரியா கூடே, ட்ரான்ஸ், அண்டே சுந்தரனிகி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

photo

இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென அனைத்து சமூகவலைதள பக்கத்திலிருந்தும் சிலகாலம் விலக போவதாக அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது “ அனைத்து சமூகவலைதள பக்கதிலிருந்தும் பிரேக் எடுக்க போகிறேன் ,உங்கள் அன்பு மற்றும் குறுஞ்செய்திகளை மிஸ் செய்வேன்” என பதிவிட்டுள்ளார். எந்த காரணத்திற்காக இப்படி திடீரென விலகுகிறார் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Share this story