ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நிகில்.. ‘ஸ்பை’ டிரெய்லர் வெளியீடு

spy

நிகில் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்பை’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

  பிரபல படத்தொகுப்பாளரான கேரி எச்.எச் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘ஸ்பை’. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நிகில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக சானியா தாக்கூர் நடித்துள்ளார். 

spy

இவர்களுடன் ஆர்யன் ராஜேஷ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அபினவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷூ செங் குப்தா, நித்தின் மேத்தா, ரவி வர்மா, கிருஷ்ணா தேஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஸ்ரீ சரண் பக்கலா மற்றும் விஷால் சந்திரசேகர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

spy

இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.  ஆக்‌ஷன் கலந்து த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ED எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. மறைக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த ரகசியங்களை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் ஜூன் 29-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

Share this story