வருஷங்களுக்கு ஷேஷம் படப்பிடிப்பில் பங்கேற்றார் நிவின்பாலி

மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஹிருதயம். மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ஹிருதயம் திரைப்படம் பிரபலம் அடைந்தது. இப்படத்தில் மோகன்லாலின் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் நடித்திருந்தார். தர்ஷனா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹிருதயம் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்தது. இதன் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசனின் தம்பி தியான் ஸ்ரீனிவாசன், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர். இப்படத்திற்கு வருஷங்களுக்கு ஷேஷம் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இந்நிலையில், இப்படப்பிடிப்பில் தற்போது நிவின்பாலி கலந்து கொண்டுள்ளார். இவர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.