‘கஜினி 2’ சான்சே இல்லை- உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்.

photo

கஜினி 2 திரைப்படம் உருவாவதாக வந்த தகவலை தொடர்ந்து  அதற்கு வாய்பே இல்லை என பிரபல தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் கூறியுள்ளார்.

photo

2005 ஆம் ஆண்டு ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் கோலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘கஜினி’.  இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. அங்கும் ஏ. ஆர் முருகதாஸே இயக்கி அதிரி புதிரி வெற்றியுடன் நல்ல வசூலையும் பார்த்தார். தொடர்ந்து இந்த படம் பான் இந்தியா அளவில் வெளியானது. அதனை இந்தியா முழுவதும் வாங்கி வெளியிட்ட பெருமை தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்தையே சேரும். இதனை தொடர்ந்து சமீபகாலமாக இணையத்தில் ‘கஜினி 2’ திரைப்படம் தயாராக இருப்பதாகவும், இதனை அல்லு அரவிந்த் தயாரிக்க போவதாகவும் செய்திகள் வெளியானது.

photo

இந்த நிலையில் இது குறித்து அவர் விளமளித்துள்ளார். அதாவது, சமூகவலைதளத்தில் பரவும் செய்தி உண்மை இல்லை. ‘கஜினி2’ படத்தை தயாரிக்கும் எண்ணம் இல்லை. இனியும் அது வராது. இது முற்றிலும் போலியான செய்தி என பதிலளித்துள்ளார். அதேப்போல தொடர் தோல்வி படங்களால் துவண்டு போன அமீர்கான்  இனி எந்த ரீமேக் படத்திலும் நடிக்க போவதில்லை என உறுதியாக இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

Share this story