இனி நீங்கள் தான் என் அம்மா, அப்பா - மகேஷ்பாபு

இனி நீங்கள் தான் என் அம்மா, அப்பா - மகேஷ்பாபு

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து அவர், அடுத்து த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய அவர், மூன்றாவது முறையாக மகேஷ் பாபுவை இயக்கி யுள்ளார். இப்படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து, பிரகாஷ் ராஜ், மீனாட்சி சௌத்ரி, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. 

இனி நீங்கள் தான் என் அம்மா, அப்பா - மகேஷ்பாபு

இந்நிலையில், படத்தின் நிகழ்ச்சியில் பேசிய மகேஷ் பாபு, என் திரைப்படம் சங்கராத்திக்கு ரிலீஸ் என்றால், அது நிச்சயம் பிளாக்பஸ்டர் தான். ஆனால், இந்த சங்கராத்திக்கு என் அப்பா என்னுடன் இல்லை. ஆனால், தற்போது எனக்கு அப்பா, அம்மா எல்லாமே என் ரசிகர்கள் நீங்கள் தான் என கண்ணீர் மல்க தெரிவித்தார். 

Share this story