ஜூனியர் என்டிஆருடன் இணையும் பிரபல தமிழ் நடிகர்.. எகிறும் எதிர்பார்ப்பு !

ntr30
ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30வது படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்திருந்தார். ராம்சரண் - ஜீனியர் என்டிஆர் கூட்டணியில் கூட்டணியில் வெளியான இப்படம் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. 

ntr30

அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்திற்காக எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.  ஜூனியர் என்டிஆர் அடுத்த படத்திற்காக இயக்குனர் கொரட்டலா சிவாவுடன் கூட்டணி அமைக்க உள்ளார். அந்தப் படத்தில் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நந்தமுரி கல்யாண் ராம் உடன் இணைந்து சுதாகர் மிக்கிலினேனி இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ஜனதா கேரேஜ் (2016) படத்திற்குப் பிறகு என்டிஆர் மற்றும் கொரட்டாலா இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் இது. இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் சையீப் அலிகான் ஆகிய இருவரையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது உறுதியானால் இப்படம் மாஸாக இருக்கும். 

 

Share this story