லிப்டாக்கில் நடித்தது ஏன் ?... குட்டி நயன் அனிகா விளக்கம் !

Anikha Surendran

‘ஓ மை டார்லிங்’ படத்தில் லிப்லாக் காட்சியில் நடித்தது ஏன் என்பது குறித்து நடிகை அனிகா சுரேந்திரன் விளக்கமளித்துள்ளார். 

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். 

Anikha Surendran

இதையடுத்து 18 வயதான அனிகா, சமீபகாலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். இதைத்தொடர்ந்து தெலுங்கில் ‘புட்ட பொம்மா’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தையடுத்து ‘ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் லிப்டாக் மற்றும் படுக்கையறை காட்சிகளில் அனிகா நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

Anikha Surendran

இது சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளாக தனக்கு எதிராக உருவாகியுள்ள சர்ச்சைகளுக்கு அனிகா விளக்கமளித்துள்ளார். அதில் ‘ஓ மை டார்லிங்’ முழுக்க முழுக்க காதல் படமாகும். அதனால் இந்த படத்தில் முத்தக்காட்சி என்பது தவிர்க்க முடியாதது. கதை சொல்லும்போதே இயக்குனர், காட்சியின் முக்கியத்துவத்தை கூறியிருந்தார். படத்தை பார்த்தாலே தெரியும் படத்தில் எந்த ஆபாசமும் இருக்காது என்று தெரிவித்துள்ளார். 

 

 

Share this story