கோஸ்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
1699945236646

சந்தேஷ் புரொடக்ஷன் தயாரிப்பில், எம் ஜி ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள படம் ‘கோஸ்ட்’ . இந்த படத்தில் சிவராஜ்குமாருடன் இணைந்து அனுபம் கெர், ஜெயராம், பிரசாந்த் நாராயணன், சத்யபிரகாஷ், தத்தன்னா மற்றும் அர்சனா ஜோயிஸ் என பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். மகேந்திர சிம்ஹா ஒளிப்பதிவு செய்துள்ளார். அனல் பறக்கும் அதிரடி ஆக்ஷனில் தயாராகியுள்ளது இந்த படம். கடந்த 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
nullGHOST PREMIERS ON NOV 17th@ZEE5India#Ghost | #ZEE5
— Shahul 𝕏 (@ShahulS1820) November 14, 2023
pic.twitter.com/mBkydy3QkH
இந்நிலையில், கோஸ்ட் திரைப்படம் வரும் 17-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதனை படத்தின் நடிகர் சிவராஜ்குமார் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.