ஆசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வான பாரடைஸ் படம்

ஆசிய திரைப்பட விருதுகளுக்கு  தேர்வான பாரடைஸ் படம்

2022-ம் ஆண்டில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி, எரிபொருள், அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஆகியவை இலங்கையில் நாடு தழுவிய போராட்டம் வெடிக்க காரணமாக அமைந்தது. இந்த இக்கட்டான நேரத்தில் தங்கள் திருமண நாளை கொண்டாட அங்குச் செல்லும் கேரள தம்பதி எதிர்கொள்ளும் நிகழ்வுகள்தான் இந்த திரைப்படத்தின் கதைக்களம். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு, கே இசை அமைத்துள்ளார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும் இந்தப் திரைப்படம், தென் கொரியாவின் புசான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

ஆசிய திரைப்பட விருதுகளுக்கு  தேர்வான பாரடைஸ் படம்

தற்போது, பாரடைஸ் திரைப்படம் ஆசிய திரைப்பட விருதுகளில் நான்கு பிரிவுகளில் தேர்வாகி இருக்கிறது. சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த எடிட்டர் ஆகிய 4 பிரிவுகளில் படம் தேர்வாகி இருக்கிறது. 
 

Share this story