சூப்பர் ஹீரோ கதையில் நடிக்கும் பார்வதி?

சூப்பர் ஹீரோ கதையில் நடிக்கும் பார்வதி? 

பூ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பார்வதி. தொடர்ந்து, சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் பல சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான உயரே திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. சினிமா மட்டுமல்லாது சினிமாவில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், சமூக பிரச்னைகள் என அனைத்துக்கும் பார்வதி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தற்போது பா ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறாார். 

சூப்பர் ஹீரோ கதையில் நடிக்கும் பார்வதி? 

இந்நிலையில், அவர் அடுத்ததாக துல்கர் சல்மான் தயாரிக்கும் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 

Share this story