பவன் கல்யாண் மற்றும் சாய் தரம் தேஜ் இணைந்து நடிக்கும் ‘ப்ரோ’... டிரெய்லர் குறித்த அறிவிப்பு

bro

பவன் கல்யாண் மற்றும் சாய் தரம் தேஜ் இணைந்து நடிக்கும் ‘ப்ரோ’ முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழில் சமுத்திரகனி இயக்கி நடித்த ‘விநோதய சித்தம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகி வருகிறது ‘ப்ரோ’. இந்த படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் மற்றும் சாய் தரம் தேஜ் இணைந்து நடித்துள்ளனர்.  பீப்ளின் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

bro

சமுத்திரகனி கதாபாத்திரத்தில்  பவன் கல்யாணும், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் நடிகர் சாய் தரம் தேஜும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ப்ரியா பிரகாஷ் வாரியர், கேட்டிகா சர்மா, பிரம்மானந்தம், சுப்புராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 

இந்த படத்தில் மனித வாழ்க்கையில் எல்லாம் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுடன் நாம் நல்ல மனதோடும் கருணையுடனும் வாழ வேண்டும் என்பதுதான் இப்படத்தின் செய்தி. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வரும் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story