அடித்து துவம்சம் செய்யும் பவன் கல்யாண்... 100 கோடி வசூலை நெருங்கும் ‘ப்ரோ’ !

bro

பவன் கல்யாணின் ‘ப்ரோ’ திரைப்படம் 100 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழில் சமுத்திரகனி இயக்கி நடித்த ‘விநோதய சித்தம்’ திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காகியுள்ளது. 'ப்ரோ' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சமுத்திரகனி கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் நடிகர் சாய் தரம் தேஜும் நடித்துள்ளனர்.

bro

 இந்த படத்தில் மனித வாழ்க்கையில் எல்லாம் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுடன் நாம் நல்ல மனதோடும் கருணையுடனும் வாழ வேண்டும் என்பதுதான் இப்படத்தின் செய்தி.  ந்த படத்தில் வழக்கமான காதல், அதிரடி சண்டைக்காட்சிகள் என எதுவும் இல்லாமல் இப்படம் உருவாகியுள்ளது. 

பீப்ளின் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி வெளியான மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 3 நாட்களில் 87 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. விரைவில் இந்த படம் 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story