பவன் கல்யாண் படம் ரி ரிலீஸ்... திரையரங்கை கொளுத்திய ரசிகர்கள்...

பவன் கல்யாண் படம் ரி ரிலீஸ்... திரையரங்கை கொளுத்திய ரசிகர்கள்...

ஆந்திர மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாணின் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்ட திரையரங்கில், ரசிகர்கள் காகிதங்களை தீயிட்டு எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாணின் ’கேமராமேன் கங்காதோ ராம்பாபு’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதற்காக ரசிகர்கள் தியேட்டருக்குள்ளும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பாடல்கள் பாடியும், காகிதங்களை கிழித்து எறிந்தும் அவர்கள் நடனம் ஆடினர். அப்போது உற்சாக மிகுதியில் கிழித்துப் போட்ட பேப்பர் குப்பைகளை ஒன்றாக சேர்த்து திரையங்கிற்குள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர் ரசிகர்கள். ஆபத்து அறியாமல் இவர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திடீரென தியேட்டருக்குள் பற்றியத் தீயால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்பு அங்கு திரண்டிருந்த ரசிகர்களை திரையரங்கு ஊழியர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

Share this story