கடவுளாக காட்சியளிக்கும் பவன் கல்யாண்.. ‘ப்ரோ’ டிரெய்லர் வெளியீடு !

bro

பவன் கல்யாண் மற்றும் சாய் தரம் தேஜ் இணைந்து நடித்துள்ள ‘ப்ரோ’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

தமிழில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படங்களில் ஒன்று ‘விநோதய சித்தம்’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படத்தை சமுத்திரகனி இயக்கியிருந்தார். இந்த படத்தில் மனித வாழ்க்கையில் எல்லாம் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுடன் நாம் நல்ல மனதோடும் கருணையுடனும் வாழ வேண்டும் என்பதுதான் இப்படத்தின் செய்தி. 

bro

தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காகியுள்ளது. இந்த படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் மற்றும் சாய் தரம் தேஜ் இணைந்து நடித்துள்ளனர். அதாவது சமுத்திரகனி கதாபாத்திரத்தில்  பவன் கல்யாணும், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் நடிகர் சாய் தரம் தேஜும் நடித்துள்ளனர்.  மேலும் இந்த படத்தில் ப்ரியா பிரகாஷ் வாரியர், கேட்டிகா சர்மா, பிரம்மானந்தம், சுப்புராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 

பீப்ளின் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் தமிழை பெற்று தெலுங்கிலும் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story