பிரம்மயுகம் படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு

மம்முட்டி தற்போது பிரம்மயுகம் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை ராகுல் சதாசிவன் இயக்குகிறார். இப்படத்தில், மம்முட்டியுடன் இணைந்து சித்தார்த் பரதா, அர்ஜுன் அசோகன், அமல்டா லீஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. கிறிஸ்டோ சேவியர் இதற்கு இசை அமைக்கிறார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பாக பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து டைட்டில் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.பிரம்மயுகம் படத்தின் ட்ரைலர் வெளியானது. நாளை படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் தணிக்கை குழு சான்றிதழை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
மம்மூட்டி நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் பிரம்மயுகம் படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்ப பெறக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில கதாபாத்திரங்கள், தங்களின் முன்னோர்களை குறிப்பதாகவும், அவர்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் கூறி ஒரு தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.