மலைக்கோட்டை வாலிபன் படம் குறித்து பிரபல வில்லன் நடிகர் கருத்து

மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் மலைக்கோட்டை வாலிபன். ‘ஆமென்’, ‘அங்காமலி டைரீஸ்’, ‘ஈ மா யூ‘, ‘ஜல்லிக்கட்டு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இப்படத்தை இயக்கினார். இந்த படத்தை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மராத்தி நடிகையான சோனாலி குல்கர்னி நடித்தார். இவர்களுடன் ஹரீஷ் பெரேடி, டேனிஷ் சேட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மலையாளம் மற்றும் தமிழ் என இருமொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது.
இது தொடர்பாக பேசிய பிரபல வில்லன் நடிகர் ஹரீஷ் பெராடி, திரையுலகில் மோகன்லாலுக்கு எதிராக பலர் செயல்படுகின்றனர். அரசியலுடன் அவரை தொடர்புபடுத்தி, தேவையில்லாமல் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களை கொடுத்தனர் என்றார்.