ரசிகர்கள் எதிர்பார்க்கும் பிரபாஸின் ‘சலார்’... முக்கிய அறிவிப்பு வெளியீடு !

salaar

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சலார்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தென்னிந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘சலார்’. கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் நடிகர் பிரபாஸ் கூட்டணியில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இவர்களுடன் பிரபல நடிகர்கள் ஜெகபதி பாபு, பிரித்விராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

salaar

பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இப்படம்‌ உருவாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 

salaar

ஏற்கனவே இப்படத்திலிருந்து போஸ்டர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள மோஷன் போஸ்டரில் மிகவும் கொடூரமான மனிதன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


 

Share this story