சங்கராந்தி ரேஸில் இருந்து விலகும் பிரபாஸின் 'ஆதிபுருஷ்'... ஏமாற்றத்தில் ரசிகர்கள் !

adipurush

சங்கராந்தியொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த பிரபாஸின் 'ஆதிபுருஷ்' தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பான் இந்தியா ஸ்டாரான பிரபாஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'ஆதிபுருஷ்'. முழுக்க முழுக்க 3டி டெக்னாலஜியில் உருவாகி வரும் ஓம் ராவத் இயக்கி வருகிறார். ஓம் ராவத் இயக்கத்தில் உருவாக வரும் இந்த படத்தில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதாவாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடிக்கின்றனர். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

adipurush

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக தயாராகி வருகிறது. இப்படம் முழுக்க முழுக்க மோஷன் கேப்சர் முறையில் தயாராகி வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி சங்கராந்தியையொட்டி வெளியாகும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கிராபிக்ஸ் நிறைய இருப்பதால் திட்டமிட்டப்படி பணிகளை முடிக்க முடியவில்லை. அதனால் படத்தின் ரிலீசை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

Share this story