'ஆதிபுருஷ்' படத்தை பார்க்க வந்த குரங்கு... 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கமிட்ட ரசிகர்கள் !

adipurush

 'ஆதிபுருஷ்' படத்தை குரங்கு ஒன்று திரையரங்கு வந்த பார்த்ததால் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்‌. 

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. புதிய யுக ராமரை பார்க்கும் வகையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சனோன் சீதாவாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.

adipurush

இராமாயணத்தின் ஒரு பகுதியை வைத்து இப்படம் உருவாகியுள்ளது. உச்சபட்ச கிராபிக்ஸ் காட்சிகளுடன் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக தயாராகி வெளியாகியுள்ளது.

சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியானது. இதற்கிடையே ஹனுமானுக்காக ஒவ்வொரு திரையரங்குகளிலும் ஒரு இருக்கை ஒதுக்கப்படும் என்று ஆதிபுருஷ் படக்குழு தெரிவித்திருந்தது. அதன்படியே அனைத்து திரையரங்களிலும் ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் 'ஆதிபுருஷ்' திரையிடப்பட்ட திரையரங்கு ஒன்றில் புகுந்த குரங்கு ஒன்று படம் பார்த்துள்ளனர்.‌ இதை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள், குரங்கை பார்த்தவுடன் ஹனுமனே நேரில் வந்ததாக கருதி ஜெய் ஸ்ரீராம் முழக்கங்களை எழுப்பினர். வியப்பை எழுப்பிய இந்த சம்பவத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படம் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. 

Share this story