வில்லேந்தி ராமராக நிற்கும் பிரபாஸ்.. ‘ஆதிபுரூஷ்’ அட்டகாசமான டிரெய்லர் அப்டேட் !

adipurush

 பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபுரூஷ்’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிரபல தெலுங்கு நடிகரான பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதாவாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.

AdipurushTrailer

புதிய யுக ராமரின் கதைக்களத்தை கொண்டு உருவாகி வரும் இப்படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. உச்சபட்ச கிராபிக்ஸ் காட்சிகளுடன் 3 டி தொழில்நுட்பத்தில் படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது.

AdipurushTrailer

கடந்த ஆண்டே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம் சில காரணங்களால் தள்ளிப்போன நிலையில் வரும் ஜூன் 16-ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வரும் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி கடும் கேலிக்கூத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story