சீதாவை மீட்கும் புதுயுக ராமனின் போராட்டம்... பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளால் மிரட்டும் ஆதிபுரூஷ்.. பிரபாஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

adipurush

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

இராமாயணத்தின் ஒரு பகுதியை வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ். புதிய யுக ராமரை பார்க்கும் வகையில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கீர்த்தி சனோன் சீதாவாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.

adipurush

உச்சபட்ச கிராபிக்ஸ் காட்சிகளுடன் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஓம் ராவத் இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக தயாராகி வருகிறது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

adipurush

கடந்த ஆண்டு இப்படத்தின் டீசர் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு ஆளானது. அதனால் இப்படத்தை மீண்டும் மெருகேற்றி புதிய தொழில்நுட்பத்தில் படத்தை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் வரும் ஜூன் 16-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சீதாதேவியை மீட்கும் புதுயுக ராமனின் போராட்டம் தான் இந்த படம். இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story