“வந்துக்கொண்டிருக்கிறேன் என் ஜானகியை மீட்க“... பிரபாஸின் ‘ஆதிபுருஷ்‘ டிரெய்லர் வெளியீடு !

Adipurush

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தின் பிரம்மாண்டமான இறுதி டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. உச்சபட்ச கிராபிக்ஸ் காட்சிகளுடன் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக தயாராகியுள்ளது. 

Adipurush

இப்படம் வரும் ஜூன் 16-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Adipurush

புதிய யுக ராமரை பார்க்கும் வகையில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சனோன் சீதாவாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். இராமாயணத்தின் ஒரு பகுதியை வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜானகியை கடத்தி செல்லும் இராவணன், படைகளுடன் சென்று மீட்கும் ராமர் என பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் டிரெய்லர் உருவாகியுள்ளது. இந்த டிரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story