‘சீதாராமம்’ இயக்குனருடன் இணையும் பிரபாஸ்.. மாஸ் கூட்டணியால் எகிறும் எதிர்பார்ப்பு !

prabhas

நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குனர் ஹனு ராகவபுடி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

பிரபல தெலுங்கு நடிகரான பிரபாஸ் பான் இந்தியா நாயகனாக வலம் வருகிறார். அவர் நடிப்பில் நவீன யுக இராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘ஆதிபுருஷ்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ மற்றும் நாக் வம்சி இயக்கத்தில் ‘பிராஜெக்ட் கே’ ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். 

prabhas

இதையடுத்து பிரபாஸ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ‘சீதாராமம்’ படத்தின் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். சமீபத்தில் பிரபாஸை சந்தித்த ஹனு ராகவபுடி கதை ஒன்றை கூறியுள்ளார். இந்த கதை பிரபாஸுக்கு பிடித்துவிட்டதால் உடனடியாக ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. 

prabhas

 பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இந்த படம் ‘சீதாராமம்‘ படம் போன்று காதல் கதையில் உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story