பிரபாஸூக்கு ஜோடியாகும் இரு நடிகைகள்... சிம்பு நடிகைக்கு அடித்தது ஜாக்பாட் !

prabhas

 பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும்  ‘கல்கி 2898 AD’ படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 தேசிய விருதுபெற்ற இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில்  ‘கல்கி 2898 AD’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து உலக நாயகன் கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகி வரும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

prabhas

இந்த படத்திற்கு பிறகு பிரபல இயக்குனர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இந்த படத்திற்கு ‘ராஜா டீலக்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

prabhas

இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் என இரு முன்னணி நடிகைகள் இந்த படத்தில் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். 

 

Share this story