பிரபாஸ் ரசிகர்களை தடியடி நடத்தி விரட்டியடித்த போலீஸ்

கே.ஜி.எப். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வரும் 22-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
#Salaar offline theatre(Counter) bookings at Telangana 👀
— AmuthaBharathi (@CinemaWithAB) December 19, 2023
Fans are getting thrashed by Police !!pic.twitter.com/Z7GRUhoSiC
இந்நிலையில், தெலங்கானாவில் திரையரங்கு ஒன்றில் டிக்கெட் முன்பதிவுக்காக முண்டியடித்துக் கொண்டிருந்த பிரபாஸ் ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.