பிரபாஸுக்கு வில்லனாகும் கமலஹாசன்.. ‘பிராஜெக்ட் கே ’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

பிரபாஸின் ‘பிராஜெக்ட் கே’ உலகநாயகன் கமலஹாசன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சலார்’ படத்திற்கு பிறகு பிரபாஸின் நடிப்பில் ‘பிராஜெக்ட் கே’ திரைப்படம் உருவாகி வருகிறத. 'மகாநதி' படத்தின் மூலம் தேசிய விருதுபெற்ற இயக்குனரான நாக் அஸ்வின் இந்த படத்தை இயக்கி வருகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பதானி நடிக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
தெலுங்கு, தமிழ், இந்தி என இப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவுபெற்றுவிட்டது. சயின்ஸ் பிக்ஷனில் உருவாகும் இந்த படத்திற்காக மிகவும் நுட்பமாக பணியாற்றி வருகிறார் நாக் அஸ்வின். அதனால் படப்பிடிப்பு நிறைவுபெற்று 6 மாதங்கள் கிராபிக்ஸ் பணிகள் மட்டுமே நடைபெறவுள்ளது
இந்நிலையில் இப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் அவர் நடிப்பை இன்று படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் கமலுக்கு 160 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். இதையொட்டி கமலின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.