விஷ்ணுவின் நவீன அவதார கதையில் பிரபாஸ்... பிரம்மாண்டமாக உருவாகும் 'பிராஜெக்ட் கே'

prabhas

பிரபாஸ் நடிக்கும் 'பிராஜெக்ட் கே' படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். 

தேசிய விருதுபெற்ற படமான 'மகாநதி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் 'பிராஜெக்ட் கே'. இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

prabhas

தெலுங்கு, தமிழ், இந்தி என இப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவுபெற்றுவிட்டது. 

இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுவிடும் என கூறப்படுகிறது. இதையடுத்து 6 மாதங்கள் விஎப்எக்ஸ் பணிகள் நடைபெறும். இந்நிலையில் இப்படம் குறித்து புதிய தகவல்களை தயாரிப்பாளர் அஸ்வினி தத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கிராபிக்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் திரைப்படம் இது. கடந்த ஐந்து மாதங்களாக கிராபிக்ஸ் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கற்பனை மற்றும் அறிவியல் புனைவு கதையாக இப்படம் உருவாகிறது. விஷ்ணுவின் நவீன அவதாரத்தை படத்தில் பார்க்கலாம். ஆக்சன் காட்சிகள் நிறைய இடம்பெற்றுள்ளதால் இப்படத்தில் சர்வதேச கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். மொத்தத்தில் இந்த படம் ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் இருக்கும் என்று கூறினார். 

Share this story