‘கல்கி’ அவதாரம் எடுத்த பிரபாஸ்.. மெய்சிலிர்க்க வைக்கும் கிளிம்ப்ஸ் வீடியோ

kalki

பிரபாஸ் நடிக்கும் ‘புராஜெக்ட் கே’ படத்தின் தலைப்பு மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘புராஜெக்ட் கே’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ள இந்த படத்தை தேசிய விருதுபெற்ற இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகி வரும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

kalki

இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து உலக நாயகன் கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.  சர்வதேச அளவில் உருவாகும் இப்படம் 10 மொழிகளில் தயாராகி வெளியாகவுள்ளது. 

kalki

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ரமோஜி பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் காமிக் கான் நிகழ்வில் ‘புராஜெக்ட் கே’ படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘கல்கி 2898 AD’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளார். ஸ்டார் வார்ஸ், ட்யூன் போன்ற ஹாலிவுட் படங்கள் பாணியிலான காட்சியமைப்புகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரோலான நிலையில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதில் பிரபாஸ் மிரட்டலான லுக்கில் உள்ளார். இந்த கிளிம்ப்ஸ் வீடியோவின் ஓபனிங்கில் நடிகர் பசுபதி இடம்பெற்றுள்ளார். ஆனால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கமலின் ஒரு காட்சி கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story