விரைவில் வெளியாகும் ‘சலார்’ டிரெய்லர்.. உறுதிப்படுத்திய தயாரிப்பு நிறுவனம் !
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சலார்‘ திரைப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இந்தியாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ஒன்று ‘சலார்’. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் வில்லனாக பிருத்விராஜ் மிரட்டலான கெட்டப்பில் நடித்துள்ளார். இவர்களுடன் ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.