ஷாருக்கானுடன் மோதும் பிரபாஸ்... சலார் மற்றும் டன்க்கி திரைப்படம் கிறிஸ்மஸ் வெளியீடு...

ஷாருக்கானுடன் மோதும் பிரபாஸ்... சலார் மற்றும் டன்க்கி திரைப்படம் கிறிஸ்மஸ் வெளியீடு...

கே.ஜி.எப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கி வரும் திரைப்படம் சலார். இதில், பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கிறார். ஸ்ருதி ஹாசன் நாயகியாகவும், ப்ருத்விராஜ், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். இப்படம் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கிராபிக்ஸ் பணிகள் முடியாத காரணத்தால் வெளியீட்டு தேதியை படக்குழு தள்ளி வைத்தது. இந்நிலையில், தற்போது டிசம்பர் 22-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சலார்  வெளியாகும் என கூறப்படுகிறது. 

அதே தேதியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் டன்கி திரைப்படமும் வெளியாகிறது. இந்திய சினிமாவின் இரு பெரும் நாயகன்களின் திரைப்படம் ஒரே நாளில் மோதுவதை தொடர்ந்து, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதே சமயம், இரண்டு பான் இந்தியா திரைப்படங்களுக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

Share this story