ராமர் கோயில் திறப்பு விழாவில் விருந்து வைக்கும் பிரபாஸ்

ராமர் கோயில் திறப்பு விழாவில் விருந்து வைக்கும் பிரபாஸ் 

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா வரும்ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை  செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீராமர் கோயில் குடமுழுக்கு, பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளி பண்டிகையாக இருக்கும் என்பதில், சந்தேகமே இல்லை. அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதையொட்டி இந்தியாவில் அனைத்து பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ராமர் கோயில் திறப்பு விழாவில் விருந்து வைக்கும் பிரபாஸ் 

இந்நிலையில், ராமர் கோயில் குடமுழுக்கு விழாவின் போது, முதல் நாளில் விருந்து ஏற்பாடுகளுக்கான அனைத்து செலவுகளையும் பிரபல நடிகர் பிரபாஸ் ஏற்றுக்கொள்வதாக கூறப்படுகிறது. இதற்காக 50 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று தெரிகிறது. 

Share this story