இந்தி திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபுதேவா
பிரபல இந்தி நடிகர் ஹிமேஷ் ரேஷ்மையா. இசை அமைப்பாளருமான இவர், கமலின் ‘தசாவதாரம்’ படத்திற்கு இசை அமைத்திருந்தார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன், ‘தி எக்ஸ்போஸ்’ என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இதன் அடுத்த பாகத்தை ‘படாஸ் ரவிகுமார்’ என்ற பெயரில் உருவாக்குகிறார். இத்திரைப்படத்திற்கு அவரே இசை அமைக்கிறார். படத்தில் பிரபுதேவா வில்லனாக நடிக்கிறார். இசைக்கும் ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.
இந்நிலையில், இந்தப் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபுதேவாவுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பாக பஹீரா திரைப்படத்தில் ஹீரா மற்றும் வில்லனாக பிரபுதேவா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

