மீண்டும் இணையும் ‘ஹிருதயம்’ கூட்டணி.. படத்திற்கு என்ன தலைப்பு தெரியுமா ?

VarshangalkkuShesham

‘ஹிருதயம்‘ படத்திற்கு பிறகு பிரணவ் - கல்யாணி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. 

மோகன்லால் மகன் பிரணவ் மற்றும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்த திரைப்படம் ‘ஹிருதயம்’. வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் தயாரான இப்படம் 80 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. 

VarshangalkkuShesham

இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரபல நடிகர் நிவின் பாலி இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இவர்களுடன் வினீத் ஸ்ரீனிவாசன், அவரது ம்பி தியான் ஸ்ரீனிவாசன், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ், அஜூ வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்நிலையில் ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ (Varshangalkku Shesham) என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. முன்னணி நடிகர் மோகன்லால் மற்றும் வினீத்தின் தந்தை ஸ்ரீனிவாசன் ஆகிய இருவருக்கிடையேயான நட்பை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. மோகன்லால் கதாபாத்திரத்தில் பிரணவ்வும், அவரது தந்தை ஸ்ரீனிவாசன் கதாபாத்திரத்தில் தியனும் நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 

 

Share this story