திரைப்படங்கள் இயக்க மாட்டேன் - பிரேமம் இயக்குநர் அதிர்ச்சி தகவல்

திரைப்படங்கள் இயக்க மாட்டேன் -  பிரேமம் இயக்குநர் அதிர்ச்சி தகவல்

‘நேரம்’, ‘பிரேமம்’, ‘கோல்டு’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் அல்போன்ஸ் புத்திரன். தற்போது அவர் தனது 4வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இளையராஜாவின் இசையில் 7 பாடல்கள் உருவாகியுள்ளது. 

திரைப்படங்கள் இயக்க மாட்டேன் -  பிரேமம் இயக்குநர் அதிர்ச்சி தகவல்

பிரபல நடன இயக்குனரான சாண்டி இந்த படத்தில் ஹீரோ நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் கோவை சரளா, சஹானா சர்வேஷ், சம்பத் ராஜ், சார்லி, ரைய்ஞல் ரெபாகா, சைக்கிள் மணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

திரைப்படங்கள் இயக்க மாட்டேன் -  பிரேமம் இயக்குநர் அதிர்ச்சி தகவல்

இந்நிலையில், திரைப்படம் இயக்குவதிலிருந்து விலகுவதாக பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் அறிவித்துள்ளார். தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதாகவும், இதனால் திரையரங்குகளுக்கு படத்தை இயக்குவதை நிறுத்திக் கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார். 
 
Share this story