காதலர் தினத்திற்கு மீண்டும் வெளியாகும் பிரேமம்

காதலர் தினத்திற்கு மீண்டும் வெளியாகும் பிரேமம்

மலையாளத்தில் மாபெரும் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படம் காதலர் தினமன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

தமிழில் நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதன்பிறகு மலையாளத்தில் உருவான ‘பிரேமம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கினார். இந்த படம் இந்தியா முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்டத்தில் மலையாளத்தின் முன்னணி நடிகர் நிவின்பாலி, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கிலும் படம் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ஸ்ருதி ஹாசன், நாக சைதன்யா நடித்திருந்தார். 

காதலர் தினத்திற்கு மீண்டும் வெளியாகும் பிரேமம்

இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு பிரேமம் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

Share this story