மிரட்டலான தோற்றத்தில் பிரித்விராஜ்... வேற லெவலில் 'ஆடுஜீவிதம்' டிரெய்லர் !

adujeevitham

நடிகர் பிரித்திவிராஜ் மிரட்டும் தோற்றத்தில் இருக்கும் 'ஆடுஜீவிதம்' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் என்பவர் எழுதிய 'ஆடுஜீவிதம்' நாவலை வைத்து உருவாகி வரும் திரைப்படம் தான் 'ஆடுஜீவிதம்'. கேரளாவில் புகழ்பெற்ற புகழ்பெற்ற நாவலான இதை அதே பெயரில் படமாக இயக்குனர் பிளஸ்சி எடுத்து வருகிறார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். 

adujeevitham

 இந்த படத்திற்கு மிரட்டலான பின்னணி இசையை இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். பல கனவுகளும் சவுதி அரேபியா சென்று அங்கு ஒட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞனின் கதை தான் இந்த படம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாக நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த சில மாதத்திற்கு முன்பு தான் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

adujeevitham

இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளா, ஜோர்டன், வாடி ரம், சகாரா பாலைவனம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து மெலிந்த நிலையில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். அதாவது அரபு நாடுகளில்‌ ஓட்டகம்‌ மேய்க்கும்‌ கதாபாத்திரத்தில்‌ பிரித்விராஜ்‌ நடித்துள்ளார்.  இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் மிரட்டலான லுக்கில் பிரித்விராஜ் இருக்கிறார். இது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

Share this story