சொந்த வீட்டை இழந்த பிரியங்கா சோப்ரா
பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா தற்போது உலகளவில் பிரபல நடிகையாக உருவெடுத்துள்ளார். பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பாடகர் மற்றும் நடிகர் நிக் ஜோனாஸை 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 3 ஆண்டுகள் கழித்து இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தங்களுக்கு குழந்தை பிறந்ததாக இந்த ஜோடி அறிவித்தனர். பிரியங்கா சோப்ராவும், நிக் ஜோன்ஸூம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய 160 கோடி ரூபாய் மதிப்புள்ள பிரம்மாண்ட வீட்டை வாங்கினர். கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் அந்த வீட்டில் வசித்து வந்தனர்.
ஆனால், தற்போது அந்த வீட்டில் கட்டுமான பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு சொந்த வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனராம்