நானியுடன் மீண்டும் இணைந்த பிரியங்கா மோகன்
நடிகர் நானி தசரா திரைப்படத்திற்கு பிறகு ஹாய் நான்னா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்துள்ளார். இப்படத்தை சௌரவ் இயக்கியுள்ளார். சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவியிலும் தேசம் அப்துல்லா இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. வைரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ,இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
#Nani31 it is… 🔥🔥
— DVV Entertainment (@DVVMovies) October 21, 2023
The most lovable combo of our Natural Star @NameisNani & #VivekAthreya is back. ❤️🤗
UNCHAINED on Oct 23rd.
Muhurtham is on Oct 24th.
Get ready to witness thrills, chills, and fun. pic.twitter.com/e4ZhM0yWyx
ஹாய் நான்னா படத்தைத் தொடர்ந்து நடிகர் நானி 31-வது திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். அடேட சுந்தரா படத்தை இயக்கிய விவேக் ஆத்ரேயே இத்திரைப்படத்தை இயக்குகிறார். டிடிவி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.