கல்கியில் வில்லனாக நடிப்பது ஏன் ?... கமல்ஹாசன் கூறிய சுவாரஸ்சிய தகவல் !
பிரபாஸின் 'கல்கி' படத்தில் வில்லனாக நடிப்பது ஏன் என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.
ஆதி புரூஸ் திரைப்படத்தில் ராமராக நடித்த பிரபாஸ் 'பிராஜெக்ட் கே' கல்கி அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார்.
இத்தனை நாட்களாக 'பிராஜெக்ட் கே' என்று தற்காலிகமாக அழைக்கப்பட்ட இப்படத்திற்கு 'கல்கி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபாஸ், கமல்ஹாசன், ராணா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பேசிய கமலஹாசன், 'கல்கி' படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் சினிமாவில் நெகட்டிவ் இல்லாமல் பாசிட்டிவ் கிடையாது. அதனால் நெகட்டிவ் முக்கியம் என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று சுவாரஸ்யமான விளக்கத்தை அளித்துள்ளார்.
இதற்கிடையே இந்த படத்தில் நடிக்க 150 கோடி சம்பளமாக கமல்ஹாசனுக்கு வழங்கப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க வெறும் 20 நாட்கள் மட்டுமே கமல்ஹாசன் கால்ஷீட் கொடுத்துள்ளார். கமல் இந்த படத்தில் வில்லனாக நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.