“கனவு நனவான தருணம்” - ‘Project k’ -ல் கமல் இணைந்தது குறித்து பிரபாஸ் நெகழ்ச்சி !

project k

நடிகர் கமலுடன் இணைந்து நடிப்பது பெருமையாண தருணம் என்று நடிகர் பிரபாஸ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

 பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. தற்காலிகமாக ‘பிராஜெக்ட்’  என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். 

project k

சுமார் 600 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகிறது. எதிர்காலத்தையும், கடந்த காலத்தையும் நிர்ணயிக்கும் படமாக இப்படம் உருவாகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. சர்வதேச அளவில் உருவாகும் இப்படம் 10 மொழிகளில் தயாராகி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது. 

project k

இந்நிலையில் இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபாஸுடன் கமலஹாசன் இணைந்து நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் கமலுக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளது. 

‘பிராஜெக்ட் கே’ படத்தில் நடிகர் கமல் இணைந்தது குறித்து பிரபாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த படத்தில் கமலுடன் இணைந்து நடிப்பது பெருமையாக உள்ளது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து நடிப்பதன் மூலம் பல விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இது கனவு நனவான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். 

 


 

 

Share this story