’புராஜெக்ட் கே’ என்றால் என்ன? – வெளியானது பிரபாஸின் ஃபஸ்ட்லுக் போஸ்டர்!

photo

முன்னணி இயக்குநரான நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகரான பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகிவரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’. இந்த படத்தில் அவருடன் இணைந்து அமிதாப் பச்சன், கமல்ஹாசன்,ராணா டகுபதி, திஷா பதானி, திபிகா படுகோன் ஆகியோர் நடிக்கின்றனர். சர்வதேச அளவில் சுமார் 10 மொழிகளில் தயாராகும் இந்த படம் கிட்டதட்ட 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்நிலையில் ‘புராஜெக்ட் கே’ படத்தின் புது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதில் பிரபாஸ் மாஸ்ஸாக இருக்கிறார். அந்த போஸ்டரில் “what is project-K”  என எழுதப்பட்டுள்ளது.  தொடர்ந்து படத்தின் முதல் கிளிம்ஸ் அமெரிக்கவில் ஜூலை 20 ஆம் தேதி வெளியாகும் என்றும் இந்தியாவில் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகும் என்றும் படக்குழு ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.  


இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்தை வைஜெய்ந்தி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Share this story