துபாயில் காதல் தி கோர் படத்தின் புரமோசன் தொடக்கம்
காதல் தி கோர் படத்தின் புரமோசன் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘காதம் தி கோர்’. இந்த படத்தை மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு மேத்யூஸ் புலிகன் இசையமைத்துள்ளார். சாலு கே தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். காதல் தி கோர் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், காதல் தி கோர் படத்தின் புரமோசன் பணிகள் தொடங்கியுள்ளன. துபாய், கேரளா, சென்னை என மாறி மாறி படக்குழு புரமோசன் பணிகளில் ஈடுபட்டு உள்ளது. துபாய் சென்ற ஜோதிகா மற்றும் மம்மூட்டியின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.