மிரட்டலான தோற்றத்தில் அல்லு அர்ஜூன்... சரவெடியாய் வெடிவிருக்கும் ‘புஷ்பா 2’... பிறந்தநாளையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு !
![pushpa 2](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/82902ec09db487d18e424aad63f7bb52.jpg)
நடிகர் அல்லு அர்ஜூன் பிறந்தநாளையொட்டி ‘புஷ்பா 2’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது..
அல்லு அர்ஜூன் மற்றும் சுகுமார் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் மிரட்டியிருந்தார். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடர்ந்த காடுகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதையடுத்து தாய்லாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘புஷ்பா’ எங்கே என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடைசியாக அந்த வீடியோ புஷ்பா வருவது போன்ற காட்சி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மொத்தத்தில் அந்த கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.